திங்கள், 24 ஏப்ரல், 2017

உன்னை தொட்டால் விண் மேகம்!!!!


உள்ளம் தொட்டு என் எண்ணம் தொட்டாய்

உன்னை அறிவேன் உன் மொழி அறியேன்

என் மொழி அறிந்தே

என்னை நீ மீட்டுகிறாய்....

உன் கடன் இன்னும் தீரவில்லை

உன் பணி உயர்வுக்கும் ஊதியம் இல்லை

எலியை பிடித்தே உண்ணுகிறாய்    

எங்கள் உணவை காத்தே உறங்குகின்றாய்

என்னை கண்டால் ஏகாந்தம்

என் கால்கள் தானே உன் வீதி வலம்

நாவால் பாதம் துவட்டித் துவட்டி

மியாவ் மியாவ் என மிகை ஒலி செய்கிராய்

புலியின் இனமே பூனைத் தம்பியே

எங்கள் இல்லம் மகிழும் செல்லம் நீயே

உன்னை தொட்டால் விண் மேகம்

உன் மொழியை கேட்டால் சுக ராகம்

சுதியும் லயமும் சுகமும் சேர்ந்து

என் துயரை போக்கிது எந் நாளும்

நன்றி எனும் வாய் மொழிக்கே

வாரித் தருகின்றாய் உன் வாழ்வாதாரம் ....பாவலர் வல்வை சுயேன்

சூதறிந்தால் தாழ்வறியாய்....

தத்தித் தாவும் முல்லை செல்வங்களே இறக்கை துணை உமக்கின்னும் போதாது கழுகுகள் வட்ட மிடுகின்றன அந் நாளில் பயம் அறியா குஞ்சே நானும் அன...