செவ்வாய், 28 ஜூன், 2016

அன்னை இல்லம் !!!நூலிடை தரிப்பில் மனசொடு மனசை கொய்தன விழிகள் 
கோலம் இட்டு கோலம் இட்டு கோல விழி யாலம் உற்று
தொட்ட சுகம் தோகை விரித்தாடி
தோப்புறவில் சொந்தம் உற்று
கட்டில் சுகம் கலைத்தே
தொட்டில் தனை ஆடவிட்டோம் !
பூத்தகொடி பூமியிலே பூவும் இல்லை பிஞ்சும் இல்லை
மண மாலைகள் சூடச் சூட மலர் ஒன்றாய் போனதடி
வாட்டுதடி வறுமைக்காடு வாய்க்கரிசி கையில் இல்லை
சொற்ப சொற்பமாய் ஒடிந்த சிற்பமே முற்றத்தில் நீ
அன்பு இல்லா இல்லம் அன்னை இல்லம் ஆனதடி
இன்பமா துன்பமா இனம் புரியா வேட்கை தொட்டு
அடி எடுத்த கால்களில் தைத்தது முள்ளு
செந்நீரின் நிறம் கண்டு கண்ணீரை நிறுத்திவிட்டேன்
காயம் பட்டும் மாய வலையில் துடிப்பெதற்கு
கலங்காதே என்றது மனசு !!

பாவலர் வலவை சுயேன்.

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்