செவ்வாய், 21 ஜூன், 2016

தமிழ் பா கூற்றெழுதி பாடி ஆடு பாவலா !!!உயிரென்ன உயிர் உயிரினும் மேலே எங்கள் தாய்த் தமிழ்  
இருள் சூழ் காட்டுடை இன்னலில் கிடப்பதேன்
என் நாளும் நீ எழுந்து மோதி வெல்லடா
தமிழ் பா கூற்றெழுதி பாடி ஆடு பாவலா
அழிவிலே ஆதி மொழி செம்மொழி அல்லவா
அள்ளிப் பருகியதை நீயும் கிள்ளிக் கொடு கொடு
அன்னைத் தமிழ் இல்லையேல் அன்புச்சரம் ஏதடா
ஒற்றை விதையினில் பூத்த கற்றை நெல் மணிகளாய்
வையகம் எங்கும் நாணம் உறுகிறாள் முப் பெரும் தேவி
நற் தமிழ் நங்கையின் பொற் பாதம் போற்றி
பாரெங்கும் இவள் நாமம் முழங்குவோம் முழங்குவோம்
வாழ்க தமிழ் வாழ்கவென மேதினியில் வளர் திரை எழுதுவோம்

பாவலர் வல்வை சுயேன்

தேனீக்களே வந்தமர்கின்றன !!

இனியவளே உன் பெயரெழுதி பேனா தந்த முத்தத்தில் நீ வருவாயென காத்திருந்தேன் தேனீக்களே வந்தமர்கின்றன உன் பெயரில் பாவலர் வல்வை சுயேன் ...