vendredi 1 juillet 2016

கண்ணாடித் துளிகளாய் வாழ்க்கை !!!!



அன்னைத் தமிழே உன்னை அமுதென உண்ட மண்ணில்
அனுதினம் அனல் ஊற்று அள்ளித் தின்கிறதே எம்மை
ஊரழிஞ்சு உறவழிஞ்சு உயிர் விட்ட கூட்டிலே
வேர் விட்டு முளைக்குமோ வேதாந்த மாயைகள்
வாழ்ந்தோரை வீழ்த்தும் உலகே கேளீர்
எம் வாசல் வந்த சுனாமியிடம் சொல்லுங்கள்
ஊருக்குள் இப்போ வரவேண்டாம் என்று !
வாரி புசித்திட உயிர்கள் இல்லை
போதனை புத்தன் சான்றெழுதி
கொற்றை பிணங்களின் குவியலில்
பிண்டங்கள் தின்கின்றன மகாவம்ச பிசாசுகள் !

இலையுதிர் காலம் அல்லவே இப்போ, இளந்தோப்பே இடுகாடாச்சு
இனிமை இல்லா இரவு பகல்களே விழிகளுக்குள் சிறையாச்சு
அன்பு பொதிந்த ரணங்களோடு கண்ணாடித் துகள்களாய்
சலனம் அற்ற கூடுகளாய் முள் கூண்டுக்குள் துடிக்குதே மீதி உறவு
பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனி எங்கே தேடுவேன்
பாதை எங்கும் என்னை பார்த்து முற்கள் சிரிக்கின்றன
அன்பை கொன்ற அனலூற்றே அள்ளித் தின்றுவிடு என்னையும் ....

பாவலர் வல்வை சுயேன்.             

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...