வியாழன், 21 ஜனவரி, 2016

வெள்ளைச் சோக்கின் நேசம்...


ஐந்து வயதில் அம்மா என்ற உலகைத் தவிர

வேறேதும் அறியேன் நான்

பள்ளியில் கல்வியே கண் என்றார்  

அகண்ட கருந் திரையில் ஏதும் தெரியவில்லை

அக்கம் பக்கத்தில் அழுதனர் என்னைப்போன்றோர்

யாரோ மூச்சா பெய்து விட்டார்கள்

என் காலுக்குக் கீழ் பாம்பு ஓடிக் கொண்டிருந்தது

எழுலகம் என்று அப்பம்மா கதை சொல்ல கேட்டுருக்கிறேன்

அதில் ஒன்ரு இதுதானோ அருண்டேன் மிரண்டேன்

அச்சத்தில் அழுதேன்.... .....

வகுப்பறைக்கு ஒரு அங்கிள் வந்து வணக்கம் சொன்னார்

எனக்கொன்றும் சொல்லத் தெரியவில்லை

சிரிப்பவர் பாதி அழுபவர் பாதியாய் இருக்க

தூரத்து வகுப்பறையில் மூத்தவர்களின் படிப்போசை கேட்டது

அமைதி உற்று ஆர்வத்துடன் நிமிர்ந் தமர்ந்தேன் கதிரையில்

மேசையில் கிடந்த வெள்ளைச் சோக்கு மட்டும்

தூடித்துக் கொண்டிருந்தது

ஏதோ எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று

வாத்தியார் தன் கையில் வெள்ளைச் சோக்கை எடுத்ததும்

கருந் திரையில் வெள்ளை எழுத்தில்

நாங்கள் கண்ட முதல் காட்சி

அ, என அகரம் தொடங்கி மூன்றெழுத்தில் அம்மா வந்து அரவணைத்தாள்

ஆ, என்று கரம் நீட்டி ஆண்டவன் எங்களிடம் கருணை செய்தான்

உணர்ந்தேன் அன்றே கல்விச் சாலையும் என் தாயின் கருவறை தானென்று

கனிவோடு இன்றும் பள்ளிக்கு போகிறேன் அங்கே அன்பு செய்யும்

அந்த வெள்ளைச் சோக்கின் நேசம் நினைந்து 

அழுக்காற்றி அறிவுடமை சேர்த்து அறிஞனாவேன் எனும் நம்பிக்கையோடு

Kavignar Valvai Suyen

மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!

கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய் புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய...