mardi 14 juillet 2015

இசை மா,மேதைக்கு என் இரங்கல்...


மெல்லிசை மன்னா எங்கள் அண்ணா
எம் எஸ் விஸ்வநாதா...
சுரங்களை நீ மீட்டினாய்
உன் ஐந்து விரல்களிலும்
அபினயம் ஆடிய
ஏழு சுரங்களும்
உன்னைத் தேடுகின்றன
இசைக்குயிலே
உன் உயிரெனும் பாடல்
எம்மோடுதானே உன் உடல் கூடு
மௌனம் கொண்டதேன்....
தீயே உனக்கு தீராத பசியோ
நீ தின்னும் உடல் எத்தனையோ
எனக் கேட்டவனே
அதனோடு இன்று ஐக்கியம் ஆகிவிட்டாய்
மறவோம் மறவோம் இசை மா,மேதையே
மரணிக்கவில்லை நீ மெல்லத் திறந்த கதவில்
ஒவ்வொரு பாடலிலும் எமை நீ ஆழ்கிறாய் ...
Kavignar Valvai Suyen

4 commentaires:

  1. சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
    அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
    மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
    இசைக் கொளரவம் நீராரும் கடலுடுத்தி..
    நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. துயர் கொண்டு துயர் பகிர்வோம் உறவே...

      Supprimer
  2. Réponses
    1. துயர் வீழ்ந்து துயர் பகர்வோம் உறவே..

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...