dimanche 30 avril 2017
samedi 29 avril 2017
பக்த்தன் நானே உன்மேல் பித்தனடி !!!
காற்றோடு
கரம் கோத்து கைவீசிப் போகும் அழகே
கல்த்தறையில்
உன் பாதம் துயருறக்கூடாதென்றே
பஞ்சணை
விரித்த பசும் புற்கள்
உன்
பாதம் கொஞ்சக் கொஞ்ச
சலங்கை
நாதம் கேக்கிதடி....
வண்ணம்
கொண்ட வளர் நிலாவே
உன்
வதனம் வாடாதிருக்க
நிழல்
தூவிய முகில் களையும்
உன்னோடு
உலா கூட்டிப் போகிறாய்
உன்னோடு
வாழவே ஊதாப் பூவாய்
உன்
காலடியில் கிடக்கிறேன்
என்னை
மிதித்து நீ எங்கே போகிறாய்
பக்த்தன்
நானே உன்மேல் பித்தனடி...
பவலர்
வல்வை சுயேன்
vendredi 28 avril 2017
தங்கம் வாங்கும் என் செல்லம்மா !!!
ஓடி ஓடி ஓடாய்
தேய்ந்து சேர்த்த பணம் என் செல்லம்மா
நீ சேமித்துச்
செழிப்புற வாங்கி வையேன் தங்கம் தப்பில்லே
சேதாரம் இல்லையடி ஆதாரம்தான் அது அழிவே இல்லே
வறுமை வந்துன் திண்ணையில்
தூங்கினால்
கலங்காதே கண்ணே
விற்றேனும் வாங்கிடுவாய்
வாழ்வும் வளமும்
அட்சய திதியன்று
தங்கம் வாங்கி சேர்த்து வைச்சா
ஊருக்குள்ளே உயர்வாயென
ஊரே சொன்னாலும்
உன் புத்தி
எங்கே போச்சு
வட்டிக்கு பணம்
எடுத்து வாங்கி வந்த தங்கம் தானே
பெட்டியிலே செல்லரித்து
உறங்கிதடி
பெட்டியிலே உள்ள
தங்கம் குட்டி ஒண்ணும் போடலையே
வறுமை வந்து
வாசலிலே வைராக்கியம் கொள்ளுதேடி
குசேலன்
வீட்டுக் கூரை காண வாறாங்க ஊரவங்க
வாங்கி வைச்ச
நகையாலே வாழ்க்கை இப்போ நாசமாச்சு
நிமிர்ந்து
பாரேன் மேலே கொஞ்சம்
குசேலன்
வீட்டுக் கூரை இப்போ நம்ம தலைமேலே
பாவலர் வல்வை
சுயேன்
jeudi 27 avril 2017
mardi 25 avril 2017
ஒற்றை ஆணியில் வண்ணப் படங்கள் !!!
இனியவனே இறந்த காலக்
கண்ணாடிச் சுவற்றில்
உடைந்து உருக்கி
வார்த்த சிலைகள் நாங்கள்
நீ இருந்தால் என்னோடு
எதிர்காலம் உறவோடு
நிகழ் காலம் எம்மை
சிதைத்துச் சிரித்தாலும்
வாழ்ந்தே வான்
உயர்வோம் அன்போடு
என்னவனும் உன்னவளும்
செந்தூர மேகமாய்
துயர் தூவி தூரம் சென்றாலும்...
ஒற்றை ஆணியில் வண்ணப்
படங்களாய்
நம் கூட்டுச்
சுவர்களில் வெள்ளை அடித்து
அவர் தம் நினைவாலே
வாழ்த் தெழுதி
வாழ்வுயர ஆசி மலர் தூவுகிறார்...
உன் பிள்ளை என்
பிள்ளை
இனி என்றும் நம்
பிள்ளை
சந்ததி வாழ சந்தோசம்
காண்போம் வா
தென்ரல் தீண்டும்
இளமை விட்டு
இன்னும் உடல்
சாயவில்லை
பாவலர் வல்வை சுயேன்
lundi 24 avril 2017
உன்னை தொட்டால் விண் மேகம்!!!!
உள்ளம் தொட்டு என் எண்ணம் தொட்டாய்
உன்னை அறிவேன் உன் மொழி அறியேன்
என் மொழி அறிந்தே
என்னை நீ மீட்டுகிறாய்....
உன் கடன் இன்னும் தீரவில்லை
உன் பணி உயர்வுக்கும் ஊதியம் இல்லை
எலியை பிடித்தே
உண்ணுகிறாய்
எங்கள் உணவை காத்தே உறங்குகின்றாய்
என்னை கண்டால் ஏகாந்தம்
என் கால்கள் தானே உன் வீதி வலம்
நாவால் பாதம் துவட்டித் துவட்டி
மியாவ் மியாவ் என மிகை ஒலி செய்கிராய்
புலியின் இனமே பூனைத் தம்பியே
எங்கள் இல்லம் மகிழும் செல்லம் நீயே
உன்னை தொட்டால் விண் மேகம்
உன் மொழியை கேட்டால் சுக ராகம்
சுதியும் லயமும் சுகமும் சேர்ந்து
என் துயரை போக்கிது எந் நாளும்
நன்றி எனும் வாய் மொழிக்கே
வாரித் தருகின்றாய் உன் வாழ்வாதாரம் ....
பாவலர் வல்வை சுயேன்
vendredi 21 avril 2017
mardi 18 avril 2017
விற்பனைக்கல்ல நிந்தன் காதல்...
விந்தை அல்லடி நீயே உலகின் ஆதி மொழி
எழுத்தாணி
கொண்டு எழுதினேன் உன்னை
இந்தப்
பிரபஞ்சமே என்னை திரும்பிப் பார்க்கிறது
என்
தாய்த் தமிழே நீயே என் காதல் மொழி
எதுகை
மோனை தொடும் முன்னே
ஏதோ
என்னை செய்கின்றாய்
பரிந்
துரைக்கிறேன்
உன்
பார்வை ஒன்றே போதும் எனக்கு
பகை நூறு வரினும் பஸ்பம் செய்திடுவேன்
செந்நீரும்
கண்ணீரும் சேர்ந்து செய்த கலவை நான்
நன்னீரும்
உவர் நீரும் பஞ்சாய் பகர்ந்தெடுத்து
மும்மாரி
பொழிகிறது என் மேல்
கண்டங்கள்
கடந்து வந்தேன்
கானல்
நிலம் கண்டு வந்தேன்
கற்பனைக்
கெட்டா மொழி அழகே
வென்று
வா மகனே என
எழுதிவிட்டாய்
என் நாவில் உன்னை
விற்பனைக்கல்ல
நிந்தன் மேல் நான் கொண்ட காதல்
அன்பால்
அரவணைத்து அகிலத்தையும் அறிவேன் அன்பே
பாவலர்
வல்வை சுயேன்
dimanche 16 avril 2017
இறுதி எண்ணிக்கை பூச்சியம் !!!
உனக்கும் எனக்கும் இடையிலோர் கணக்கு
சேர்ந்தே வாழ்கிறோம் இது கூட்டல்அமுதூட்டி அன்பு செய்தார் தாய் தந்தை
அவர்களின் மரணத் தூது வந்து சொன்னது-
கழித்தல்
பந்த பாச வடம் இழுத்து சந்ததி தந்தார்-
பெருக்கல்
கூடு விட்டு ஆவி போகும் நேரம்
பிய்த்தெறிந்தது உறவின் நெஞ்சை-
பிரித்தல்
கணக்குப் போட்டு வாழ்ந்தோர்கள்
இணக்கப்பாடு தீரும் முன்னே
இழுத்துச் செல்லும் இறுதிப் புள்ளி-
பூச்சியம்
எத்தனை முகவரி எத்தனை வடிவங்கள்
எங்கே இருந்தாலும்
எல்லோர்க்கும் இறுதி முகவரி ஒன்றே ஒன்றுதான்
அது மயானம்.....
பாவலர் வல்வை சுயேன்
vendredi 14 avril 2017
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் உறவே...
சித்திரை பிறந்து தித்திக்கும் திரு நாளில்
மாறா அன்புக் காதலில் மனமுருகி
பொங்கு தமிழ் பா தொடுத்து
இவ் வையகத்து மாந்தரெல்லாம்
வாழ்வோம் வளமோடு
தித்திக்கும் பொங்கலே பொங்கு பொங்கு
பூ மழை தூவட்டும் பாரெங்கும் மான்புறவே
வாழிய எங்களின் தமிழ் புத்தாண்டே
வாழ்வோம் நாம் இனிதே
நின் திரு நாமம் நாவெழுதி....
பாவலர் வல்வை சுயேன்
jeudi 13 avril 2017
lundi 10 avril 2017
என்னை மறந்தேன் இனிதே மெல்ல !!
சொர்க்கத்தை வெல்ல
வல்ல மௌன மொழியும்
தோற்றது உன்னிடத்தில்
எங்கள் செல்லமே
உன் கொஞ்சும் தமிழ்
வாய் மொழி கேட்டு
என்னை மறந்தேன் இனிதே
மெல்ல
உள்ளக் கதவுக்குள்
ஒளிந்துகொண்டு
மூன்று தமிழ்
கோர்த்து முகவுரை தருகின்றாய் நீ
போதும் போதும் எங்கள்
பூ மலரே
வாழையடி வாழையென வந்த
வம்ச விளக்கே
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு வானுயர் செழிப்போடு
நலம் யாவும் உன் கை கோர்த்து நடக்குமே நூறாண்டு
பாவலர் வல்வை சுயேன்
mardi 4 avril 2017
அழகான அந்த ஆலமரம் !!!
மண்பற்று மிகுந்த மனம் - விண்
தொட்டே உயர்ந்த குணம்
ஊர் நடுவே உந்தன் நிழலில்
உறவின் சங்கமம்
உலைக் களமும் கலைக் களமும்
உந்தன் நிழலிலே உரிமைச் சங்கமம்
ஊர் நடுவே உந்தன் நிழலில்
உறவின் சங்கமம்
உலைக் களமும் கலைக் களமும்
உந்தன் நிழலிலே உரிமைச் சங்கமம்
ஊருக்கு உறு துணையாய் நீ இருக்க
கோடரி வீசி உன்னை அறுத்தும்
வீழாது மாழாது விழுதுகளில் வாழ்கிறாய்
மானக் குடை உனது வீரக் கிளை
கோடரி வீசி உன்னை அறுத்தும்
வீழாது மாழாது விழுதுகளில் வாழ்கிறாய்
மானக் குடை உனது வீரக் கிளை
குலம் வாழணும் மனை வாழணும்
ஊர்கூடி வாழ்ந்த இனம்
உரிமைக் கோலோச்சி
தாய் மண்ணில் ஏர் உழணும்
உரம் இட்டு ஏற்றம் இறைக்கின்றேன்
வேர் அறுத்தவர் குலம் நீறாகட்டும்
புலர் வேளை புள்ளினங்களோடு
புனர் ஜென்மம் காண்போம் எழு
ஊர்கூடி வாழ்ந்த இனம்
உரிமைக் கோலோச்சி
தாய் மண்ணில் ஏர் உழணும்
உரம் இட்டு ஏற்றம் இறைக்கின்றேன்
வேர் அறுத்தவர் குலம் நீறாகட்டும்
புலர் வேளை புள்ளினங்களோடு
புனர் ஜென்மம் காண்போம் எழு
ஆலும் வேலும் விட்டகலாது
உறவின் சங்கமம்
உறவின் சங்கமம்
பாவலர் வல்வை சுயேன்
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...