வியாழன், 21 ஏப்ரல், 2016

நீலவிழி பாவை.... பனி படர்ந்த காட்டில் பஞ்சாடை களையும் பகலவனே
நீ செய்த மாயம் என்ன ?
வெண்ணிற ஆடை களைந்த இயற்கையாளொடு
நீலவிழி பாவையொன்று விழி இமை தட்டி
விரல்களால் கோலமிட்டு வா என்றழைத்தது என்னை!

தரைமீது அன்னமோ தங்கச்சிமிழோ என நான் பாத்திருக்க
அவளின் பிறை விரல் நகங்களை
நூலாடை இல்லா நண்டுகளும் தொட்டு விளையாடி
புதுக்கவிதை எழுதி பூக்கோலம் வரைந்தன, அந்த மணற்பரப்பில் !

விழ்ந்தேனா வாழ்ந்தேனா அறியேன் அந்த நீல விழிக்குள்
விழி மூடா இரவுகளோ நூறு
அவளுயிரே நான் என அவள் வரைந்த ஓவியங்கள்
நூற்றுக்கு நூறு !
இருவரின் பரிச பரிமாற்றத்தில் நனைந்த இரவும் பகலும்
நான்கு விழிகளின் நட்சத்திர நர்த்தனம் கண்டு
நன்றி கூறிச் சென்றன தாம் பிறந்து இறந்த நினைவுகளோடு  

மாதங்கள் பன்னிரென்டில் மார்கழி வந்து செல்ல
வைகாசி பகலவனால் நூலாடைகளும் மெல்ல விலக
மீன்டும் மணல்பரப்பில் நேசக்காதல் நீல விழி பாவை
அந்த நீலவிழிகளுக்குள் புதிய கென்டைகளை நீந்தவிட்டு
மறுவீடு போய்விட்டாள்!
இரண்டு மனம் வேண்டாமென யாரிடம் சொல்வேன்
இயற்கை எனும் இளைய கன்னியை கைகோர்த்து வாழ்கிறேன்

Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்