வியாழன், 14 ஏப்ரல், 2016

தமிழர் புத்தாண்டாம்.. !
சித்திரை ஒன்று இன்றென்று அதிகாலை
தட்டப்படுகிறது கதவு !
தமிழர் புத்தாண்டாம் நாள்காட்டியும் சொல்கிறது
உண்மைதான் போலும் !

என்ன சத்தம் அங்கே ?
ஓர் சிலர் சீனவெடி கொழுத்துகிறார்கள் !
வீரப்பிரதாபம் கொள்ளும் போர்த்தேங்காய்
அடிக்கவில்லை !
காரணம், யுத்த நெஞ்சுரம் கொண்ட மண்வாசம்

செம்மொழி தமிழென்றான் செரிக்காத ஒருவன்
ஆறரைகோடி தமிழன் இருந்தும்
அம்மொழியே அம்மணமாய் கிடக்கிதடா
ஆறடி நிலமும் சொந்தம் இல்லா தமிழா

உனக்கொரு நாடு வேண்டுமடா
அன்,நாள் காணும் பொன்,நாள் எதுவோ
அதுவே தமிழரின் புத்தாண்டென கொள் நீ
புதுயுகம் காண புயலாய் எழு... எழு...
அனல்மின் அல்லடா... அணுவுலையே நீதானடா...

Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்