ஞாயிறு, 29 மே, 2016

நீ என்றும் சுமங்கலியே !!!!!சுவாசம் இழந்தபின் வாசம் செய்யுமோ இங்கு என் கூடு
ஒற்றைச் சுவாசம் ஒருபோதும் ரெட்டை கூட்டில் வாழ்வதில்லை
உயர் வாழ்வளித்தேன் உனக்கென நான் நினைந்திருந்தேன்
நினைவலை அறுத்து பந்தம் எரித்து பாதியில் போகுதே உயிரு !
கூடு விட்டுச் செல்லும் என் ஆவி
உன்னை கூட்டிச் சென்று குற்றுயிரில் குறுகிடாது
விதி முடிந்த தென வீழ்ந்துவிடாதே !
நதி எழுதும் சிற்றலை தொடரில் பூக்களை தூதுவிட்டு
பாக்களோடு பல்லவியாகு
சரணம் நிறைவுற்று பிறவிப் பெருங்கடலின்
பெரும் பேற்றுக் கரை ஏறி கனிவுறுவாய் நீ !

பாவலர் வல்வை சுயேன்