mardi 31 mai 2016
dimanche 29 mai 2016
உண்மைதான் நீ அழகியடி!!!
உச்சி மலைச் சாரல்
வந்து உன் சேதி சொன்னதடி
உண்மைதான் நீ
அழகியடி !
உருகாத மனமும்
உனைக் கண்டு உருகிட
பனி மலையும் பயம்
கொள்ளுதே உன்னிடத்தில்
உண்மைக் காதலின்
முன் நீயும் நானும் வேறல்ல
துலைந்துவிட்டேன்
உனக்குள் நான்
எங்கே தேடுகிறாய் என்னை
நீ
நீ பாடும் பூபாளம்
கேட்க ஆதவனும் வரும் முன்னே
என் நாளும்
வருகிறேன் உன்னிடத்தில் என் கிராமியக் குயிலே !!!
பாவலர்
வல்வை சுயேன்
நீ என்றும் சுமங்கலியே !!!!!
சுவாசம்
இழந்தபின் வாசம் செய்யுமோ இங்கு என் கூடு
ஒற்றைச்
சுவாசம் ஒருபோதும் ரெட்டை கூட்டில் வாழ்வதில்லை
உயர்
வாழ்வளித்தேன் உனக்கென நான் நினைந்திருந்தேன்
நினைவலை
அறுத்து பந்தம் எரித்து பாதியில் போகுதே உயிரு !
கூடு
விட்டுச் செல்லும் என் ஆவி
உன்னை
கூட்டிச் சென்று குற்றுயிரில் குறுகிடாது
விதி
முடிந்த தென வீழ்ந்துவிடாதே !
நதி
எழுதும் சிற்றலை தொடரில் பூக்களை தூதுவிட்டு
பாக்களோடு
பல்லவியாகு
சரணம்
நிறைவுற்று பிறவிப் பெருங்கடலின்
பெரும்
பேற்றுக் கரை ஏறி கனிவுறுவாய் நீ !
பாவலர்
வல்வை சுயேன்
lundi 23 mai 2016
குற்றவாளி யார் !!!!!
தூற்றுவார்
தூற்றவும் போற்றுவார் போற்றவும்
மண்ணில் வந்து தவழ்கிறது மழைத் துளி !
மனிதா
நீ என்ன தவம் செய்தாயோ
ஆழக்
கிணறு தோண்டவில்லை
ஆகாசம்
ஏறி வாங்கவில்லை
வளங்களெல்லாம் வாரித் தந்து
வடிந்து செல்கிறது மழை நீர் உன்
வாழ்வுக்கு !
வடிகால்
மறித்து வரப்புயர்த்தி நிந்தனை செய்தவனே
கொள்ளுமிடம்
கொள்ள சமுத்திரம் காத்திருக்க
மாடி
மனை கோடி செல்வம் அழிந்ததென்று
வன்
சொல் வீசும் முன் உன் மனசிடம் கேட்டுச் சொல் !
இயற்கை
தந்த கொடை பெற்று நீ என்ன செய்தாய் அதற்கு !
பாவலர்
வல்வை சுயேன்.
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...