சனி, 13 ஜூன், 2015

ஆசி நீர்த் திவலைகள்....


இரண்டறக் கலந்த இல்லறத் தோப்பில்
உயிரோவியஙகள் இரண்டு இரு வேறு கூட்டில்    
மனசெனும் மலரை ஒரே நாரில் கட்டி
நூறாண்டு வாழ்ந்துவிட்டோம்...          
 
எடுத்த பிறவியை இறக்கும் வேளையிது
புதிய மிலேனியத்தின் பரிணாமங்களிலும்
பதியம் வைத்து நடக்கிறன கால்கள்...
கைத் தாங்கல் காம்பிரண்டும்
சொல்லாமல் சொல்லுதே என் மணவாளா
முதுமை வயசாச்சே எமக்கென்று
 
தீயை சாட்ச்சி வைத்து பற்றிய கரங்களும்
வேர்வைத் துளி மெழுகில்
தனித் தனியே வழுகிதடி...
 
தீயே தீப்பிடித்து தீய்ந்தாலும் - தின்ன
என்னும் எண்ணவில்லை எம்மை
முற்றுப் புள்ளி எதுவோ
இணைந்தே இன்னும் நடப்போம்
இறுதி அத்தியாயத்தின் பக்கங்களை
அன்புக்கரங்கள் புரட்டப் புரட்ட
ஆசை மிகுதாகுதடி
வஞ்சனை இன்றி ஒருமனசாகவே
மரணம் ஆட்கொள்ளட்டும் எம்மை
இறுதி மாலை சூடி மேகங்களும் தூவும்
எமக்கான ஆசி நீர்த் திவலைகள்...

Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்