mercredi 7 mars 2018

அழியாத கோலம் எழுதாத பாடல்!!!

நோயில் வீழ்ந்து பாயில் துடித்து
அம்மா அம்மா என்றே
அழுதேனம்மா ....
எரியும் திரி ஒன்று
தன்னுதிரம் தனில் ஒளி ஏற்றி
எனை தாங்கி எரிகிறதே அம்மா
தாயே நீ இன்றி விழி நீர் மல்க
விரல் கோதி விழி துடைத்து
தன் மடி சுமக்கின்றாளே கோதை
அழியாத கோலம் எழுதாத பாடல்
இவளும் என் அன்னையே
எரியும் திரி ஒளியே
எனை தாங்கும் சுடரே
என் தாரமும் தாயும் நீயே
என் அன்னையை கண்டேன் உன்னில்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...