mardi 15 novembre 2016

விழிகள் காணும் கோலங்கள் !!!



மூடித் திறந்த இமை இரண்டில்
எண்ணம் எல்லாம் வண்ணமே
வாலிப வயசு வாழ்வெனும் கொலுசில்
கூர்மம் கொண்டு கொல்லும் போதில்
பந்தம் என்ன பாசம் என்ன
சொன்னால் பாவமே
பற்றறுத்து பற்றும் தீயில்
கண்ணில் வேடமே !
முக்தி என்றும் சக்தி என்றும்
சுற்றம் சூழ்ந்து எரியுதடா
ஆத்மாக்கள் அங்கும் இங்கும்    
அலையும் துயரை போக்கடா
தூயவர் இங்கே யாரடா !

தூரிகை என்ன தாரகை என்ன
அவரவர் காணும் கோலங்களே
ஆனவரை அழுதாலும்
ஆண்டவனை அழைத்தாலும்
நிர்வாணமே இறப்பும் பிறப்பும்
இதுதானே நாம் காணும்
நியதி யெனும் நிதர்சனங்களே !

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...