வெள்ளி, 25 மார்ச், 2016

ஓடுது இங்கே கூட்ச் வண்டி !!!!!நான்கு கண்கள் இரு முனை இன்றநெற் நோக்க
சொந்த பந்தம் இல்லா சொந்த நினைப்போடு
முத்தம் கொடுக்கும் முதல் வகுப்பு பெட்டிகளில்
விழி வளி மொழி எழுதி வாசிக்கப்படுகிறது
முகவுரை இல்லா முகநூல் பக்கங்கள் !

அக்கரை பார்வையில் இக்கரை பச்சை
இக்கரை நோக்கின் எக்கரை பச்சை
லைக்கொடு லைக்காய் சற்றோடு லிப்ற் ஏறி
இன்றர் வலையில் நான்மறை வேதம் ஓதி
நற்துணை அறுந்து நலம் கெட வீழ்ந்தும்
முலாம் பூசிய இணைப்புக் கட்டைகளின் மேல்
ஓடுதிங்கே கூட்ச் வண்டி !!

தாவணிப் பெண்களின் தரம் தங்க முலாம் கொலுசு
அழகன் என முருகன் என பொய்யுரைத்த பித்தரும்
நேருக்கு நேர் நோக்கிய நோக்கலில்
அசலும் நகலும் தோற்றுப் போயின !!!
பிளாட்போம் அறிவிப்பு பயணிகளுக்கான கவனத்திற்கு
சிட்டுக்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்திருப்பதால்
எநதத் தெடரூந்தும் இன்று ஓடாதெனச் செல்லி
காற்றோடு கலந்தது அந்த ஒலி !!!!
Kavignar Valvai Suyen

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற எண்ணச் சிறகை விரித்து வந்தேன் இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்...