lundi 29 juin 2015
lundi 22 juin 2015
இன்று நான் நாளை நீ...
ஆளுமை விட்டு அகல்வதில்லை அன்பு
தேனீக்கள் தந்த காயம் கண்டும் மயங்குகின்றன
நேசம் கொன்ட மலர்கள்..
தொட்ட இடம் இனிக்க
நினைவுப் பொதிகள்
நெஞ்சறைக்குள்
சுமையின் கனமோ
நடு இராத்திரி இருளுக்குள்
அஞ்சவில்லை!
இரவு கழிந்து விழிக்குத் துணையாக
விடியல் கண்டு உலகை சுற்றுகின்றன
பட்டாம் பூச்சிகள்
பொம்மை விளையாட்டில்
இன்று நான்... நாளை நீ...
கட்டுப்பாடில்லா தட்டுப்பாடு
சுட்டாலும் சும்மா கிடக்கிதில்லை
ரணங்கள் தொட்ட பின்பே
குணங்கொள்கிறது குன்றேறி...
Kavignar Valvai Suyen
samedi 20 juin 2015
இதழ் மலர்களே இரகசியக் கடிதம்..
ஆசை அறுபது நாள் என்பதும்
மோகம் முப்பது நாள் என்பதும் பொய்த்தன..
இதழ் மலர்களின் இரகசியக் கடிதங்கள்
இங்கும் அங்கும் பருவ காலத் தேனீக்களாய்
மகரந்தப் பரிமாற்றங்களில்.....
மன்மதத் தேனீக்களே மலர்ந்தும் மலராத
கண்ணாம் பூச்சி விளையாட்டில்
உமதுறவில் ஒரு புது வரவு
வரவின் முன்னே
சிசுக் கொலைச் சேதாரங்கள்
தாளம் பூக்களே தாங்கவில்லை மனசு
அந்த இராத்திரிக்கு சாட்சி உண்டு
தீர்ப்புகள் திருத்தப் படும்வேளை
திரும்பி பாருங்கள் அங்கே உங்கள் முகம்...
Kavignar Valvai Suyen
vendredi 19 juin 2015
என் அம்மா.....
கல்விச்சாலை விட்டு
கை வீசி நடந்து வந்தேன்கடும் வெயில் சுட்டதென்று
கதிரவனை எரித்துவிட்டு
உச்சி மோந்து
மேனி எங்கும்
முத்தம் தந்தாள் என் அம்மா...
கொட்டும் மழை கண்டு
காகிதக் கப்பல் கட்டி
மழை நீரில் விட்டு வந்தேன்
உள்ளம் நொந்து என்னைத் துவட்டி
வென்னீர் ஒத்தடம் இட்டாள் என் அம்மா..
என்னை நினைந்தே அவள் வாழ்ந்திருந்தாள்
தன்னை நினைந்ததில்லை...
கொள்ளிக் கடன் எனச் சொன்னார்
இட் டெரித்தேன் தாய் மேனியை தீயில்
எரிவது உன்னுடல் அல்லத்தாயே என் மேனி
விழி நொந்து சுடு நீர் ஊற்று பெருகுதடி
உன்னையல்லால்
வேறொரு தெய்வம் அறியேனம்மா
இன்னொரு ஜென்மம் எனக்கிருந்தால்
உனக்கே நான் தாயாவேன்
நீ என் பிள்ளையாய் பிறக்கவேண்டும்..
Kavignar Valvai Suyen
jeudi 18 juin 2015
mardi 16 juin 2015
lundi 15 juin 2015
ஒரு கை ஓசை...
விழிச்
சிறகுகள் விரிய விரிய
மெல்ல
பதித்தேன் சுவடுகளை நீ வருவாயென!
விடை தந்து சென்றவனே
நீ விடியலை தரவில்லை
பறக்கிறேன் வீழ்கிறேன்
அழுகிறேன் சிரிக்கிறேன்
ஒற்றைச் சிறகை
காணவில்லை!
கரை தொட ஓடும் சமுத்திர அலைகளே
கூட்டிச் செல்லுங்கள் என்னை
எண்ணச் சிறகை உதிர்த்துவிட்டேன்
அந்த மணல் விரிப்பில் நான்
அமைதியுற வேண்டும்.
Kavignar Valvai Suyen
dimanche 14 juin 2015
முற்றத்து முற்கள்...
மலரென்ற
நினைப்பில் வர்ணங்கள் குளைத்தேன்
முற்கள்
தைத்தன நெஞ்சை நான் நான் என்ற மிகையே எனக்குள்ளே
ஏன் என்று கேட்டதில்லை உள்ளம்
பிறர் வாழ ஏதும் செய்தறியேன்
தற்பெருமை முற்களே முடி சூடின
நாம் என்று நினைந்தறியேன்
ஊர் என்ற உறவறியேன்
என்னையல்லால்
ஏதும் இல்லை என்றுருந்தேன்
நோய் வந்து பிணிகொள்ள
சேயாய் தாவுதே இக்கணம் என் மனசு
நெரிஞ்சி புதர்கள் என் நெஞ்ச நிறைவிருக்க
குறிஞ்சி நில வாழ்வு குசலம் கொள்ளும் என
ஏன் நினைந்தேன்
மலரே மறந்துவிட்டேன் உன்னை..
Kavignar Valvai Suyen
samedi 13 juin 2015
ஆசி நீர்த் திவலைகள்....
இரண்டறக் கலந்த இல்லறத் தோப்பில்
உயிரோவியஙகள் இரண்டு இரு வேறு கூட்டில் மனசெனும் மலரை ஒரே நாரில் கட்டி
நூறாண்டு வாழ்ந்துவிட்டோம்...
எடுத்த பிறவியை இறக்கும் வேளையிது
புதிய மிலேனியத்தின் பரிணாமங்களிலும்
பதியம் வைத்து நடக்கிறன கால்கள்...
கைத் தாங்கல் காம்பிரண்டும்
சொல்லாமல் சொல்லுதே என் மணவாளா
முதுமை வயசாச்சே எமக்கென்று
தீயை சாட்ச்சி வைத்து பற்றிய கரங்களும்
வேர்வைத் துளி மெழுகில்
தனித் தனியே வழுகிதடி...
தீயே தீப்பிடித்து தீய்ந்தாலும் - தின்ன
என்னும் எண்ணவில்லை எம்மை
முற்றுப் புள்ளி எதுவோ
இணைந்தே இன்னும் நடப்போம்
இறுதி அத்தியாயத்தின் பக்கங்களை
அன்புக்கரங்கள் புரட்டப் புரட்ட
ஆசை மிகுதாகுதடி
வஞ்சனை இன்றி ஒருமனசாகவே
மரணம் ஆட்கொள்ளட்டும் எம்மை
இறுதி மாலை சூடி மேகங்களும் தூவும்
எமக்கான ஆசி நீர்த் திவலைகள்...
Kavignar Valvai Suyen
mardi 9 juin 2015
jeudi 4 juin 2015
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...