வெள்ளி, 20 மார்ச், 2015

தெய்வத்தை தேடுகிறேன் ..


உலகை காட்ட கதிரவன் வருகிறானாம்
கைத் தடியோடு போகிறேன்..
கருமையே வெறுமையாய்
எங்கும் விரிந்து கிடக்கிறது
ஐம்புல வாசலில் ஒன்று
திறக்கப் படவில்லை என
யார் யாரோ சொல்கிறார்கள்!
 
ஏதேதோ என்னை ஆழ்கிறது
ஏதும் தெரியவில்லை
எட்டிட முடியவில்லை
புலன் ஐந்தையும்
ஒரு நிலை கொள்கிறேன்
கண்களை காணவில்லை!
 
உடன் பிறந்தோரிடமும்
உயிர் உள்ளோரிடமும்
பாவித்த கண்களையே கேட்கிறேன்
உயிர் பிரிந்து போகும் வேளையில்
தீ தின்பதை தந்துவிட்டுப் போங்கள் என்று
என் தவ வலிமையில்
நான் காணும் தெய்வம் உண்டெண்றால்
எனக்கு விழி தரும் இறையே
முழு முதல்த் தொய்வமாகும்
இந்த உலகை காணும் முன்
என் இறையே...
உன்னையே முதல் காண்பேன்..
Kavignar Valvai Suyen

தேவ தேவா உன் தேவி இங்கே ...

தேவ தேவா உன் தேவி இங்கே வாழ்வும் தாழ்வும் ஏன்தான் அன்பே வாழ்வோம் வா வாசம் போகா வாடா மலர் உன் தோழில் சேரத்தான் தேவ தேவா உன் தேவ...